கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி
லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டெலியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.