
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 36 ஆயிரத்து 49 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 74 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தொற்றுறுதியான அனைத்து கைதிகளும் ஆண்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 3,372 பேருக்கு இதுவரையில் தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் 114 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
அத்துடன் சிறைச்சாலைக் கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் 1,172 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.