அப்பா பாடலுக்கு நடனம்.. ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு குவியும் லைக்குகள்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தன்னுடைய அப்பா பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் 2013 ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது. 

 

இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தந்தை நடிப்பில் வெளியான ரிதம் படத்திலிருந்து தனக்கு பிடித்த பாடலான ”காற்றே என் வாசல் வந்து..” என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ஐஸ்வர்யா அர்ஜுன்

 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதிக லைக்குக்களையும் குவித்து வருகிறது