
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 கோடியைக் கடந்தது...!
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 80,193,344 ஆக அதிகாித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,756,939 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான தொற்றாளர்கள் அமொிக்காவில் பதிவாகியுள்ளனர்.
கடந்த நாட்களோடு ஒப்பிடுகையில் 24 மணித்தியாலங்களுக்குள் மரணித்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்திருப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தொிவிக்கின்றன.
இதேவேளை பிாித்தானியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீ-117 எனும் புதிய வைரஸ் முதன் முறையாக பிரான்ஸிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10ம் திகதி லண்டனிலிருந்து வருகை தந்த ஒருவரே இத்தொற்றுக்குள்ளாகியிருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.