தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், தவிர்க்க வேண்டியவை எவை?

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், தவிர்க்க வேண்டியவை எவை?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலை பாதிக்கும் ஒரு நிலையாகும். கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி,

பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.

▪ மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், அடிவயிற்றில் வலி, தலைவலி, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, உடல் எடை இழப்பு, வாந்தி சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.

 

 

▪ தவிர்க்க வேண்டிய உணவுகள்: உப்பு மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகள்.

▪ பதப்படுத்தப்பட்ட கொழுப்பு உணவுகள், மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

▪ சமைக்காத காய்கறிகள், சமைக்காத உணவுப் பண்டங்கள் மற்றும் அரைகுறையாக சமைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

▪ எளிதில் ஜீரணமாகாத உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

▪ உப்பு, கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை அளவோடு சேர்த்து வருவது நல்லது. சரியான கட்டுப்பாடுடனான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் மஞ்சள் காமாலையில் இருந்து வெளி வரலாம்.