கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான்...

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான்...

எமது உடலில் கொழுப்பு சத்து அதிகப்படியாக இருந்தால் இதய நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், கொழுப்பு முற்றிலுமாக தேவையில்லை எனக் கூற முடியாது, எமது உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கு கொழுப்பு சத்தும் மிக முக்கியமானது.

இந்த கொழுப்பானது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வேக்ஸ் போன்ற பொருளாகும்.

இந்த கொழுப்பு அதிகரிக்கும் போது சில சமயம் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது, இதனால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதைவிட கொழுப்புக்கள் அதிகளவில் உடலில் இருந்தால் இதய நோய்கள் மற்றும் ஸ்டிரோக் ஏற்படலாம். 

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

நம் உடலில் கொழுப்பின் அளவுகள் அதிகரித்துள்ளது என்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக கால்களில் சில அறிகுறிகள் தெரிய வரும். இவை இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

கால்கள் அடிக்கடி பிடித்துக் கொள்கின்றன என்றால் உடலில் உள்ள எல்.டி.எல் கொழுப்பின் அளவுகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

கால்களுக்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதன் அறிகுறியாகவே பிடிப்புகள் ஏற்படுகின்றன.

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

பொதுவாக மழைக்காலங்களில் நம் பாதங்கள் நீண்ட நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் மற்ற நாட்களிலும் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பின், அது அதிக கொழுப்பு உள்ளதற்கான எச்சரிக்கை ஆகும்.

கொழுப்பு காரணமாக இரத்த ஓட்டம் குறைய தொடங்கும் போது, நம் கால்களின் சருமத்தின் நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நிறம் மாறுவதை அலட்சியமாக நினைத்து விடக்கூடாது.

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

கொழுப்பு அதிகரிப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் குறையும் நிலையில் கால்களில் அடிக்கடி உணர்வின்மை ஏற்படலாம்.

சட்டென்று எழுந்து நிற்கவும், நடக்கவும் மிகுந்த சிரமம் ஏற்படலாம். அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

கடினமான வேலை அல்லது உடல் பயிற்சியின் போது ஏற்படும் வலி இயல்பானது.

அதை விடுத்து கொஞ்ச தூரம் நடந்தால் கூட கால்களில் கடுமையான வலி ஏற்படுகிறது என்றால் அது கொழுப்பின் அறிகுறிகள் ஆகும்.

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா...! எச்சரிக்கை ; காரணம் இதுதான் | Health High Cholesterol 6 Warning Signs In Legs

அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை சீரான அளவில் இருப்பது அவசியமாகும். புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கக் கூடாது.

தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு, சோடா, துரித உணவுகள் போன்றவற்றை குறைத்து, காய்கறிகள், பருப்புகள், நார்ச்சத்து உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.