திருகோணமலையில் இராணுவ சிப்பாய் தற்கொலை

திருகோணமலையில் இராணுவ சிப்பாய் தற்கொலை

திருகோணமலை - பொல்லேன்கொட இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அலுவலகத் துப்பாக்கியால் இன்று பகல் தன்னைத்தானே சுட்டு இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரவபொத்தானையை சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதல் பிரச்சினை குடும்ப பிரச்சினையாக மாறியதால் இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.