கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..!

கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..!

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்து பாடசாலைகளும் தற்போது தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் 3 பாடசாலைகளில் தலா ஒவ்வொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை.

எதிர்காலத்தில், தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான அபாய நிலை உள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.