
12 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!
நாட்டில் இன்றையதினம் (13) 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
எனவே அதிக வெப்பம் காரணமாக வேலை செய்யும் இடங்களில் அதிக நீர் பருகுதல், வெளியே செல்லும் போது நிழலில் இருத்தல், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைச் வெப்பத்திலிருந்து பாதுகாத்தல்,
வாகனங்களில் குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்த்தல் ,வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்தல், வெளிர் நிற ஆடைகளை அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.