‘மன்னித்துவிடு’ என மனைவியின் காலில் விழுந்து கதறிய தொழிலாளி

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சிக்கிக்கொண்ட தொழிலாளி தனது தவறை உணர்ந்து ‘மன்னித்துவிடு’ என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

தார்வார் (மாவட்டம்) டவுனில் உள்ள லட்சுமி சிங்கனகெரேவை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் முத்துராஜுக்கும், கம்பாபுராவை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

 


இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி முத்துராஜின் குடும்பத்தினருக்கும், லட்சுமியின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனால் இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தார்வார் தாலுகா முகதா கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த முத்துராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராஜையும், அவரது கள்ளக்காதலியையும் கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் தார்வார் டவுனில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முத்துராஜிக்கு போலீசார் அறிவுரை வழங்கி மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர்.

இதனால் மனம் திருந்திய முத்துராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். பின்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்த முத்துராஜ், தனது மனைவி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், போலீசார் மற்றும் அவ்வழியாக வந்து சென்றோரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது அவர், ‘‘நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று கூறினார். குறிப்பாக அவர் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த செயல் மகளில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் முத்துராஜ் தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே முத்துராஜ் தனது மனைவி உள்பட பலரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை சிலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூல வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.