
மத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* பிரதமரின் புதிய சுயசார்பு ஆரோக்கிய திட்டம் ரூ.64 ஆயிரத்து 180 கோடியில் தொடங்கப்படும்.
* விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க சிறப்பு திட்டங்கள்.
* ரெயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற சுகாதாரத்துக்கு ரூ.16.713 கோடி ஒதுக்கீடு.
* ஜவுளி துறைக்கு ரூ. 7.148 கோடி ஒதுக்கீடு.
* ஸ்மார்ட் அம்ருத் திட்டங்களுக்கு ரூ.62.04 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு.
* முத்ரா போஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.