காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் நீடிக்க மோட்டார் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, மார்ச் 16 முதல் ஜூன் 30 வரை காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 வரையில் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களின், செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கடிப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.