மாஸ்டர் விஜய்யாக மாறிய பிக்பாஸ் கவின்: வைரலாகும் அசத்தல் புகைப்படம்

மாஸ்டர் விஜய்யாக மாறிய பிக்பாஸ் கவின்: வைரலாகும் அசத்தல் புகைப்படம்

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின், மாஸ்டர் விஜய் போன்று உடை அணிந்து ஸ்டைல் காட்டிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கவின், இதன் மூலம் ஏராளமான பெண்களின் மனதில் குடியேறினார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிகமான ரசிகர்களை பெற்றார், இதில் இவரை சுற்றியே ஏராளமான சர்ச்சைகள் வலம்வந்தன.

கடைசியில் 5 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறினார், தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாக பரவி வருகிறது, காரணம் மாஸ்டர் விஜய் போன்ற உடை அணிந்து கொண்டு அவரது தோற்றத்துக்கே மாறியிருக்கிறார்.