போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்த்த தருணம்! கந்தையா பாஸ்கரன் நெகிழ்ச்சிப் பேச்சு
ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த மண்ணை நேசித்து வந்திருக்கிறேன் என ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், “ஆரம்பத்தில் இத்திரைப்படம் மில்லர் (Miller) என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
கதையைக் கேட்டபோதே இதன் முன்னோட்டக் காட்சியால் நான் மெய்சிலிர்த்துப் போனேன்.
நான் இதனைத் தயாரிக்கிறேன் என்றவுடன் என் மீது வஞ்சமம் பொறாமையும் கொண்ட சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால், அந்த விமர்சனங்கள் என்னைச் சோர்வடையச் செய்யாமல் மேலும் ஊக்கப்படுத்தின ” எனவும் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,