முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு | Demolition Memorial Wall At Mullivaikkal Mutram