
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 36 மணித்தியாலங்களுக்கு கொழும்பு – புத்தளம் ஏ-3 பிரதான வீதி மூடல்!
கொழும்பு – புத்தளம் ஏ-3 பிரதான வீதி எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதான வீதியில் நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் தொடருந்து கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக அந்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 6 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரையான 36 மணித்தியாலங்களுக்கு கொழும்பு – புத்தளம் ஏ-3 பிரதான வீதி மூடப்படவுள்ளது.
எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை தலைமையகம், சாரதிகளிடம் கோரியுள்ளது.