
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், ‘2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது