பள்ளி முதல்வரிடம் புழுவாய் துடித்த 11 வயது மாணவி... கதறலை காணொளியாக எடுத்த மற்றொரு ஆசிரியர்

பள்ளி முதல்வரிடம் புழுவாய் துடித்த 11 வயது மாணவி... கதறலை காணொளியாக எடுத்த மற்றொரு ஆசிரியர்

பீகாரில் பள்ளி முதல்வர் ஒருவர் 11 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததையடுத்து தற்போது அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா என்பவர் பள்ளியை நிர்வகித்து வருவதோடு, பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை, கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்ற போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்பு விசாரணையில் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்

ஒருநாள், ஆசிரியர் அபிஷேக்குமார், மாணவியை முதல்வர் அழைப்பதாக கூறி கூட்டிச் சென்ற நிலையில், அங்கு இந்த வன்கொடுமையில் முதல்வர் ஈடுபட்டதை, அபிஷேக் உடந்தையாக இருந்தது மட்டுமின்றி காணொளியாகவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதோடு, பலமுறை சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை ஆரம்பித்துள்ளது. சிறுமியின் கர்ப்பத்தினை மருத்துவமனையில் கலைக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தி அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

விசாரணை அதிகாரி கூறும்போது, குற்றம் தொடர்பான தடயங்களை அழிக்க, பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்ததாகவும், தக்க சமயத்தில் பொலிசார் தீயை அணைத்து தடயங்களை பாதுகாத்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், “தங்கள் உறவினர் மூலமாக, வழக்கை தனக்கு சாதகமாக முடிக்கவும், பள்ளி முதல்வர் முயற்சித்ததாகவும்” பொலிசார் தெரிவித்தனர்.

அரவிந்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும், மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும், அவருடன் குற்றத்திற்கு துணை புரிந்த அபிஷேக்குமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சிறுமிக்கு வன்கொடுமை நிதி உதவி திட்டத்தின் கீழ், எதிர்கால வாழ்வு நலன்கருதி ரூ.15 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சிறுமியின் பெற்றோர் இந்த தீர்ப்புக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளனர்.