புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவுடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு!

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவுடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.