தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!

தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!

பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன்னரே பேருந்தை சாரதி செலுத்த ஆரம்பித்ததால், குறித்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார்-முல்லைத்தீவு பேருந்து, முல்லைத்தீவில் இருந்து மன்னார் நோக்கி வருகின்ற போது அரச பேருந்து ஒன்றும் குறித்த முல்லைத்தீவு பேருந்தும் அதிவேகமா வந்து பள்ளமடு சந்தியில் இரு பேருந்துகளும் நிறுத்தி செல்கின்ற போது முல்லைத்தீவில் இருந்து வருகை தந்த பேருந்து அரச பேருந்தினை முந்தி செல்வதற்கு முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்திலிருந்து, இறங்குவதற்கு இருந்த பயணியை இறங்கும் முன் பேருந்தினை செலுத்தி பயணியை வீழ்த்தி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளமையினால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்! | Mannar Bus Got Off Dropped Before Passenger

பேருந்திலிருந்து வீழ்ந்த பயணி காயமடைந்து பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது போன்று கடந்த மாதம் இவ்வாறு அரச பேருந்தில் இருந்து இறங்கிய பயணியை பாலியாற்றில் வீழ்த்தி அப்பயணியும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் பேருந்துகளின் சாரதி மற்றும் நடத்துனரின் கவயீனம் குறித்து கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.