மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் வழமைக்கு
தொடருந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாக மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.
இன்று நண்பகல் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்தொன்று நாவலப்பிட்டி - இங்குருஓயாவுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில், ஜயசுந்தரஓவிட்ட எனும் பகுதியில் தடம்புரண்டதாக பிரதான தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையகத்துக்கான தொடருந்து நடவடிக்கைகளில் சுமார் ஒரு மணித்தியால தாமதம் நிலவியது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026