இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் -அடித்து நொருக்கப்பட்டன வாகனங்கள்

இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் -அடித்து நொருக்கப்பட்டன வாகனங்கள்

அனுராதபுரம் -ஹொரவபொத்தானை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தச்சம்பவம் நேற்றிரவு(28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவபொத்தானை- முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் சென்ற நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும், இதனை அடுத்து மதவாச்சி சந்தி பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதல் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,முப்படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் ,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.