தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வேகத்துடன் வந்த தனியார் பேருந்து இரண்டு பேருந்துகளை முந்தி செல்ல முற்பட்டவேளை சமிஞ்சையை செலுத்தி எதிர்பக்கத்திற்கு செல்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து | Accident Involving Three Wheeler And Bus Kilinochi

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.