அமெரிக்காவில் கொவிட் 19 நான்காம் அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை
அமெரிக்காவில் கொவிட் 19 நான்காம் அலை ஏற்படக்கூடும் என்று அந்தநாட்டின் உயரிய சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரொச்செல் வொலென்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அண்மைக்கால கொரோனா வைரஸ் தரவுகள் கவலையளிப்பனவாக உள்ளன.
பல வகையான உருதிரிபடைந்த கொரோனா வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் அதிக வீரியமிக்க பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் வகைகள் தொடர்பாக அதிக கவலையடைய வேண்டியுள்ளது.
இந்தநிலைமை, நாட்டில் நான்காவது அலையை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்மிக்கது.
இந்த இடத்தில் சரியாக செயற்படாவிட்டால், இதுநாள் வரையில் கொவிட் தடுப்பு விடயத்தில் அமெரிக்கா அடைந்த முன்னேற்றம் பாதிப்படையக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்