ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு ஈரான் விதிக்கும் நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமானுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தைச் சார்ந்தது அல்ல என்றும், மாறாக அமெரிக்கா "ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதையே" சார்ந்துள்ளது என்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் சர்தார் மொஹெப்பி இவ்வாறு கூறியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் மேற்கோள் காட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை புவியியல் மற்றும் மூலோபாய சக்தி
"எங்களைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை என்பது ஒரு பொருளாதார நீர்வழி மட்டுமல்ல, அது புவியியல் மற்றும் மூலோபாய சக்தியின் ஒரு அங்கமும் ஆகும்," என்று மொஹெப்பி தெரிவித்துள்ளார்.

மேலும், "அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிராந்தியப் பேச்சுவார்த்தைகளில் தலையிடுவதை நிறுத்தினாலேயே" இந்த நீர்வழி திறக்கப்படும் என்றும் அவர் கூறியதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
"ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் பட்சத்தில், ஹோர்முஸ் நீரிணை நிச்சயமாகத் திறக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.