
பிக்பாஸ் கேபியா இது? தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சிறுவயது புகைப்படம்... கொள்ளை அழகை நீங்களே பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் கடைசி கட்டத்தில் இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்தது சரியான முடிவு என்றும் இந்த சின்ன வயதில் மிகச் சரியான முடிவை எடுத்த கேப்ரில்லாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் கேப்ரில்லா தனது சக போட்டியாளர்களின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டிருக்கிறார் என்பதும், அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கேப்ரில்லாவின் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் கேப்ரில்லா உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.