வட மாகாணத்தில் 11ஆவது கொவிட்-19 மரணம் பதிவு

வட மாகாணத்தில் 11ஆவது கொவிட்-19 மரணம் பதிவு

வட மாகாணத்தில் இன்று 11ஆவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளது.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 82 வயதுடைய ஒருவரே இன்று மரணித்தார்.

இதையடுத்து, வட மாகாணத்தில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.