மாவட்டம் முழுவதும் வேட்பாளர்களுடன் பயணிக்கவுள்ள கோட்டாபய!

மாவட்டம் முழுவதும் வேட்பாளர்களுடன் பயணிக்கவுள்ள கோட்டாபய!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வமான தேர்தல் பிரசாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொள்ள உள்ளார்.

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு ஆதரவான தலாவ தம்மென்தென்னாதவ பிரதேசத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் நரடபெறவுள்ளதுடன் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு ஆதரவான கூட்டம் கலாவெவ பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன் வேட்பாளர் வீரசேன கமகேவுக்கு ஆதரவான கூட்டம் கெக்கிராவை நகருக்கு அருகில் நடைபெறவுள்ளது. ஆர்.சிறிபால மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஆதரவான கூட்டங்களும் அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.