
ஸ்ரீலங்காவில் நடந்த இரண்டு நெகிழ்ச்சி சம்பவம்! கண்கலங்கிய மஹிந்த ராஜபக்ச
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் அவர் நெகிழந்து போயுள்ளார்.
அண்மையில் 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் 5000 ரூபாய் பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்கிய செய்தியை தனது தந்தை ஊடாக தெரிந்து கொண்டதாகவும், தானும் தனது சேகரிப்பு பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க விரும்புவதாகவும், தனது தந்தையின் தாய் நாட்டை தானும் நேசிப்பதாகவும் கூறி குறித்த சிறுமி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.