இன்று முதல் நெடுந்துார பேருந்து சேவைகளில் சிவில் உடையணிந்த காவல்துறை உத்தியோகத்தர்கள்

இன்று முதல் நெடுந்துார பேருந்து சேவைகளில் சிவில் உடையணிந்த காவல்துறை உத்தியோகத்தர்கள்

வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் (04) 07 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகூடிய வாகன விபத்துக்களைப் பதிவுசெய்த காலப்பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேருந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையிலீடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது