சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது "வேலைக்கு ஏற்ற ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக தொழிற்சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக, மின்சார சபையின் அன்றாடச் செயற்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள் | Ceb Employees Stage Two Day Sick Leave Protest

அத்துடன் புதிய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளில் தாமதம் ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நிலவும் முரண்பாடடை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.