5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கலில் சிக்கல்

5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கலில் சிக்கல்

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட, தெரிவுசெய்யப்பட்ட சில தரப்பினருக்காக 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், சில பிரதேசங்களில் நிவாரண கொடுப்பனவு வழங்கலில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு தாமதமானமை, அதனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காமை என்பனவே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு உரிய திட்டமிடல் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதால் தமது சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் 5,000 ரூபா நிவாரண வழங்கல் நடவடிக்கையில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பதாக இலங்கை கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கார தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக, நேற்றைய தினம் கருத்து தெரிவித்திருந்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம், இன்றைய தினம் அதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது