பேர்த் நகரம் மூன்று நாட்களுக்கு முடக்கம்!
அவுஸ்திரேலியாவின் மேற்கு நகரான பேர்த்தில், மூன்று நாள் முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த விருந்தகம் ஒன்றில், தொற்றுறுதியான வெளிநாட்டவர்களிடம் இருந்து, தொற்று மேலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வட அவுஸ்திரேலிய பிரதமர் மார்க் மக்கோவன் மூன்று நாட்கள் முடக்க நிலைக்கு உத்தரவிட்டுள்ளார்.
2 கோடியே 50 இலட்சம் சனத்தொகையை கொண்ட அவுஸ்திரேலியாவில், இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
900 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது