நேற்று 21,715 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது
கொவிஷீல்ட் (அஸ்ட்ராசெனெகா) கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை நேற்று (04) 21,715 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 139,286 ஆக அதிகரித்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் அவசர பாவனைக்காக கொவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இந்தத் தடுப்பூசியின் முதலாவது செலுத்துகை ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய, 925,242 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
