நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
நேபாள நாட்டில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம் ஹல்ப்ஹலி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் இன்னும் வெளியாகியுள்ளன.
அதேபோல், நேபாளத்தின் போக்ஹரா பகுதியில் இருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 ஆக அந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.