மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது உறுதி- பிரதமர் நம்பிக்கை

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது உறுதி- பிரதமர் நம்பிக்கை

இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றியீட்டுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொதுஜன முன்னணியுடன் இணைவார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.