வாடகை வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் அநீதிகள் - மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு

வாடகை வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் அநீதிகள் - மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு

ரைட்-ஹெய்லிங் செயலிகளைப் பயன்படுத்தும் வாடகை வாகன சாரதிகள், தாங்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாட்டை அளித்துள்ளனர்.

எல்ல பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் செயலிகள் இன்றி இயங்கும் முச்சக்கர வண்டி சாரதிகளால், தமது சாரதிகளில் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

வாடகை வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் அநீதிகள் - மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு | Hire Vehicle Drivers Complaints Human Rights

முச்சக்கர வண்டி தொழில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள போதிலும், அண்மைய வாரங்களில் வாடகை வாகன சாரதிகளிடையே பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

செயலி அடிப்படையிலான வாகன சேவைகளை இயக்கும் சாரதிகளை அச்சுறுத்துதல், மிரட்டுதல் மற்றும் தாக்குதல் போன்ற சட்டவிரோத செயல்களை சில முச்சக்கர வண்டி சாரதிகள் ஈடுபடுவதாக கூறப்படும் ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட இதுபோன்ற செயல்களால் சிரமத்திற்குள்ளான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.