
கமல் படத்தினை இயக்கிய பிரபல இயக்குனர் திடீர் மரணம்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்
பிரபல இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகராசன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.
இவர், முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். மகராசன், ராணித்தேனி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இயக்குநரான இவரது மகன் ஜி.எ.ஆர். குமரவேலன், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாஹா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், 90 வயதான இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன், வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.
கடந்த சில மாதங்களாக திரைத்துறையினர் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், ஜி.என். ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.