
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வாறு ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.உவைஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில், ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது, கல்வி, சுகாதாரம், காணி, மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்குமென உவைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-6351278828785619" data-ad-slot="1437470177" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins><script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>