
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள் தொடர்பிலும் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான கைதி ஒருவர் அடையாளங் காணப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காது கட்டுப்படுத்ததுவதற்காகவே சிறைச்சாலைகள் திணைக்களத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
அவர் ஜூன் 27 ஆம் திகதி கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையத்திலிருந்து குறித்த கைதி வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சிறை அதிகாரிகள், கைதிகள் உட்பட 177 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதி மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டது.