உலகின் சில முன்னணி இணையத்தளங்கள் செயலிழந்தன!

உலகின் சில முன்னணி இணையத்தளங்கள் செயலிழந்தன!

உலகின் முன்னணி இணையத்தளங்களான பைனேன்ஷியல் டைம்ஸ், நியூயோர்க் டைம்ஸ், சிஎன்என் மற்றும் ப்ளூம்பர்க் உள்ளிட்ட இணையத்தளங்கள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மேற்படி இணையத்தளங்களுக்கு முடக்கநிலைக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்  மற்றும் அமேசன் நிறுவனத்தின் ட்விட்ச் (Twitch) இணையதளமும் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கிளவுட் சேவை வழங்குநரான பாஸ்ட்லீயில் Fastly (FSLY) ஏற்பட்ட கோளாறினால் இந்த நிலைமையை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், குறித்த நிலைமை சரி செய்வது தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.