ஒட்டுமொத்த இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பசில்!

ஒட்டுமொத்த இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பசில்!

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் செயல்பாடுகளினால் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரவேண்டிய தேவ ஏற்பட்டிருக்கிறது. எனவே தெளிவான பலத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது 19 திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் ஒட்டுப் போட்ட சட்டையை போன்று காணப்படுகிறது.

இதனால், அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, மக்களின் நலன்களுக்காக, நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க தேவையான தெளிவான அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, எதிர்பாராத வகையில், கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்நோக்க நேரிட்டது. தற்போது அந்த தொற்று நோய் பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தை அடிப்படையாக கொண்டு இம்முறை தேர்தலில் மக்களுக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.