நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(21) முதல்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் பஹலகொரகோய ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ​இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை 12 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 82 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.