4 பேரில் ஒருவர் கைது
அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை மீறி முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்மென்னாவ பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு காவற்துறை கட்டளையினை மீறி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.