பேர்ல் கப்பல் தீக்கிரையான சம்பவம் - மீன்பிடித்துறை பாதிப்புக்கு இடைக்கால இழப்பீடு

பேர்ல் கப்பல் தீக்கிரையான சம்பவம் - மீன்பிடித்துறை பாதிப்புக்கு இடைக்கால இழப்பீடு

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையான சம்பவத்தில் மீன்பிடித்துறை பாதிக்கப்பட்டதையடுத்து இடைக்கால இழப்பீடாக 720 மில்லியன் ரூபா வழங்க குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முழு இழப்பீடு பெறப்படும் வரையிலான இடைக்கால கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்த 720 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.