யாழில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது!
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு - நடுத்துருத்தி கடற்கரையில், இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
3 அடி நீளமும், 2.2 அடி அகலமும் கொண்ட குறித்த கடலாமை, நேற்றைய தினம் கரையொதுங்கியுள்ளது.
இதனை அவதானித்த மீனவர்கள், அது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக, உயிரிழந்த கடலாமையின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர்.
சினிமா செய்திகள்
சீரியல் நடிகை ரவீனா தாஹா-வா இது! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025