18 லீற்றர் எரிவாயு கொள்கலன் தொடர்பான வர்த்தமானி அடுத்த வாரம்!

18 லீற்றர் எரிவாயு கொள்கலன் தொடர்பான வர்த்தமானி அடுத்த வாரம்!

18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலன் 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு, அமைச்சர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.