இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீ - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிவந்த இண்டிகோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்துமிடத்திற்கு செல்லும் போது கம்பம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த கம்பம் ''Visual Docking Guidance System (VDGS) எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட கம்பமாகும்.
அதிகாரிகள் விசாரணை
எனினும் விபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.