
பிக்பாஸ் ஜோடியில் ஏற்பட்ட பிரச்சினை: மன்னிப்பு கேட்க கூறிய நகுலுக்கு வனிதாவின் பதிலடி
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி சர்ச்சை பற்றி நகுல் பேசி இருப்பதற்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அதற்கு பின்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு மற்றொரு பெண் தான் தடையாக இருக்கின்றார் என்று ரம்யா கிருஷ்ணனை தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நகுல் அளித்திருக்கும் பேட்டியில், வனிதா அம்மன் கெட்டப் போட்டுகொண்டு செட்டில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தன்னை பற்றி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் ஆதரவாக பேசிய நிலையில், தற்போது வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
"நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது, அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாமா என நான் முடிவு செய்தேன்."
"எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான்.
நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
Absolutely...too busy living my life to be bothered about blabbing jobless idiots.. what happened on the sets and what was reshot with the judges and edited to viewers are 2 different things...I didn't accept the marks which was given to us so I made my choice to not continue.. https://t.co/win3dq9Y0R
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 3, 2021