
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியும் விட்டுக்கு செல்லாத யாஷிகா.. காரணம் இதுவா? கசிந்த தகவல்!
நடிகை யாஷிகா விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் ஆகியும் வீட்டுக்கு செல்லவில்லை என வெளியாகிய தகவல் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவானி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளதாகவும், அதில் தான் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாகவும், வீட்டுக்கு சென்றால் தோழி பவானி நினைவு வரும் என்பதால் வீட்டுக்கு போகாமல், ஃபேமிலி பிரென்ட் ஒருவர் வீட்டில் தங்கி இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தனக்கு இதுவரை மூன்று ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் செய்துள்ளதாகவும் வழி தற்போது வலி கொஞ்சம் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.